ஈரான் தலைநகரான தெஹ்ரானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் ஒருவர் பலி 57 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகரான தெஹ்ரானுக்கும் அல்போஷ் மாகாணத்துக்குமிடையில் 4.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை கட்டடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  57 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.