”முத்­தையா முர­ளி­த­ரனுக்கு அன்று செய்தது தவறுதான்” 22 வருடங்களுக்குப் பிறகு வாய் திறந்தார் ஸ்டீவ்

Published By: Robert

27 Dec, 2017 | 12:03 PM
image

உலகின் முதல்­தர சுழல் ஜாம்­ப­வா­னான இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர சுழற்­பந்து வீச்­சாளர் முத்­தையா முர­ளி­த­ரனின் பந்­து­வீச்சு பாணி சட்ட விதி­களை மீறி­யது என்ற பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து அவரை அவ­மா­னப்­ப­டுத்தப் பார்த்­தனர் என்று அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரி­வித்­துள்ளார்.

இந்தச் சம்­பவம் நடந்து கிட்­டத்­தட்ட 22 வரு­டங்கள் கழித்து இந்தத் தக­வலை அவர் தற்­போது வெளி­யிட்­டுள்ளார்.

முத்­தையா முர­ளி­தரன் தனது கிரிக்கெட் வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­றும்­வ­ரை­யிலும் எதி­ரணி வீர­ருக்கு அச்­சு­றுத்­த­லா­கவே இருந்தார்.

இத்­த­னைக்கும் ஆசிய நாடு­களை விட மேற்­கத்­தைய நாடு­க­ளான அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து ஏன் தென்­னா­பி­ரிக்க அணி கூட முத்­தையா முர­ளி­த­ரனின் பந்­து­வீச்சை எதிர்­கொள்­வ­தென்றால் அவர்­க­ளுக்கு ஒரு வித பயம் தொற்­றிக்­கொள்ளும்.

இந்நிலையில் முர­ளி­தரன் பந்தை வீசி எறி­வ­தாக அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் நடு­வர்­க­ளான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்­தினர்.

ஆனால் இந்த குற்­றச்­சாட்டு முத்­தையா முர­ளி­த­ரனை அவ­மா­னப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே அவர் மீது சுமத்­தப்­பட்­ட­தாக தற்­போது அவுஸ்­தி­ரே­லிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரி­வித்­துள்ளார்.

தற்­போது மெல்­போர்னில் நடை­பெற்­று­வரும் இங்­கி­லாந்து – அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்­டியை முன்­னிட்டு 

அவுஸ்­தி­ரே­லிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, அவுஸ்­தி­ரே­லிய ஊடகம் ஒன்­றுக்கு கருத்து தெரி­வித்த போதே இதனை தெரி­வித்­துள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு நடை­பெற்ற பொக்ஸிங் டே டெஸ்ட் போட்­டியில் இலங்கை -– ஆஸி. அணிகள் மோதன. இந்தப் போட்­டியின் போது முத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

முத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருப்பின், அது போட்டி ஆரம்­பத்­திற்கு முன்னர் தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய பிரச்­சினை எனவும், முர­ளி­தரன் அத்­த­கைய சூழ­லுக்கு முகம் கொடுத்தமை யானது, வீரர்கள் முகம் கொடுக்கக் கூடாத துரதிர்ஷ்டவசமான நிலையெனவும் ஸ்டீவ் வோ குறிப்பிட் டுள்ளார். 

இதன் மூலம் முரளிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக 22 வருடங்கள் கழித்து தெரிவித்துள்ளார் ஸ்டீவ் வோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31