மேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டா­மை­யினால் வழக்கு விசா­ரிப்­பதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. எனவே விசேட சந்­தர்ப்­பங்­களில் மற்றும் குறிப்­பி­டு­வ­தற்கு உகந்த சாதா­ரண கார­ணங்கள் கொண்ட சந்­தர்ப்­பங்­களை தவிர்ந்த ஏனைய அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் மேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­கு­களை விசா­ரணை செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் உரு­வாக்­கப்­பட உள்­ளன. 

இதனை கட்­டா­யப்­ப­டுத்தும் வகையில் உறுப்­பு­ரை­களை உள்­ள­டக்கி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்­டத்­தினை திருத்தம் செய்­வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்து­கோரள அமைச்­ச­ரவை அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் சட்ட திருத்­தங்­களை கெண்டு வரு­வதற்கு அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது. இவ்­வாறு திருத்­தங்கள் கொண்டு வரப்பட்டால் வழக்கு விசாரணைகளில் தாமத நிலை ஏற்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.