யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்

By Robert

27 Dec, 2017 | 10:25 AM
image

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை சென்­றது. யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினார்.

இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­மையை அடுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் முடி­யாமல் உள்­ளது. அப்­ப­டி­யாயின் இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா?. இவ்­வாறு செயற்­பட்டு எப்­படி நல்­லி­ண­க்கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மை­யிலும் மனோ கணேசன் தலை­மை­யிலும் நல்­லி­ணக்கம் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் நடக்கும் போது இப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

தற்­போது சிறுபான்மை மக்­களை தமது ஆதிக்­கத்தை வளர்த்து வரு­கின்­றனர். நாட்டின் முக்­ கி­ய­மான அமைச்­சுக்கள் பல முஸ்­லிம்­க­ளிடம் உள்­ளது. இவர்­களின் செயற்­றி­றனை பார்த்து சிங்­கள தலை­வர்கள் பாடம் கற்­றுக்­கொள்ள வேண்டும். அத்­துடன் தற்­போது சிறு­பான்மை மக்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வ கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிக ளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right