சரத்­பொன்­சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு

Published By: Raam

08 Feb, 2016 | 07:52 AM
image

ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்வார் என அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை இவ­ருக்கு "படை­யினர் நலன்­பு­ரிகள் அமைச்சர் " பதவி வழங்­கப்­படும் என்றும் அறி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­காளிக் கட்­சி­யாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் ஜன­நா­யகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்­டது. இது தொடர்­பான இரு தரப்­புக்கும் இடையே புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க - சரத்­பொன்­சே­காவும் அல­ரி­மா­ளி­கையில் கையெ­ழுத்­திட்­டனர்.

இந்­நி­லையில் மறைந்த தேசியப் பட்­டியல் எம்.பி.யான எம்.கே.டி. எஸ்.குண­வர்­த­னவின் வெற்­றி­டத்­திற்கு சரத்­பொன்­சே­காவை நிய­மிப்­பது தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும், இது தொடர்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியின் விசேட செயற்­குழு கூட்டம் இன்று திங்­கட்­கி­ழமை கூட­வுள்­ள­தாவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இந் நிலையில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடும்­போது சரத்­பொன்­சேகா எம்.பி.யாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்­வா­ரென்றும் அதன்­பின்னர் அவ­ருக்கு படை­யினர் நலன்­புரி அமைச்சர் அல்­லது சட்டம் ஒழுங்கு பாது­காப்பு தொடர்­பான அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டலாம் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ் விடயம் தொடர்­பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பி­டு­வ­தா­வது,

நான் எம்.பி.யாக பத­வி­யேற்­கின்­றமை தொடர்பில் இது­வ­ரையில் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­பட வில்லை. எப்­போது என்­பது தெரி­யாது. அமைச்சர் பதவி வழங்­கு­வதா? இல்­லையா? என்­பதை ஜனா­தி­பதி பிர­த­ம­ருமே தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்றம் வரவேண்டும் என்பது தொடர் பில் எம்.பி பதவி வெற்றிட மேற்படுவதற்கு முன்னரே பிரத மர் ரணில் விக்கிர மசிங்கவுடன் பேச்சுக்கள் இடம் பெற்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02