பாலகனின் நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் இயேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும்  காட்சி  உருவசிலைகளைப் பயன்படுத்தி  காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  , அங்கிருந்த  இயேசு பாலகனின் உருவச் சிலையை எடுத்துச செல்ல முயற்சித்த  பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை  பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 மேலாடையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்  சர்ச்சைக்குரிய  பெண்கள் அமைப்பொன்றின் பெண்கள் அமைப்பின் பெயரை வர்ணத் தூரிகையைப் பயன்படுத்தி எழுதியிருந்தார்.

 இயேசு பாலகனின்  பிறப்பை வெளிப்படுத்தும் காட்சியை  ' கடவுள் ஒரு பெண்'  எனக் கூச்சலிட்டவாறு நெருங்கிய அவர், அங்கிருந்த இயேசு பாலகனின்  உருவச் சிலையை பற்றி அதனை  எடுத்துச்  செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில்  அந்தப் பெண்ணின் செயற்பாட்டை அவதானித்த   அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வடிரைந்து சென்று  அவரது  முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன்   அவரை உடனடியாக கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

2014  ஆம் ஆண்டு நத்தார் தினத்தில்  மேற்படி குழுவைச் சேர்ந்த பெண்  ஆர்ப்பாட்டக்காரர்  ஒருவர் வத்திக்கானில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்த இயேசு பாலகனின் உருவ சிலையை ஒருவாறு அங்கிருந்து தூக்கிச் சென்றிருந்தார். எனினும் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.