பலங்கொடை – வெலிகேபொல பொலிஸ் பிரிவில் 17 வயது இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த இளம்பெண்  உடவளவ பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் பேஸ்புக் காதலர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் அவருடையது அல்ல என்பது தெரியாமலே குறித்த பெண் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டு சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் பேஸ்புக் காதலன் இளம் பெண்னை சந்திக்க வேண்டும் என கூறி கடந்த 20ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறும் தானும் கொழும்பிற்கு வந்து பெண்னை சந்திப்பதாக கூறியுள்ளார்.

இவர்களது திட்டத்தின் படி கடந்த 20ஆம் திகதி கொழும்பிற்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறியதிலிருந்து முகம் தெரியாத காதலனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். பேஸ்புக் காதலனும் அவ்வாறே மாறி மாறி அழைப்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறிருக்க பெண் கொழும்பு நகரத்தை கிட்டியவுடன் பேஸ்புக் காதலன் அழைப்பை ஏற்படுத்தி

“ எனக்கு இன்று கம்பனியில் அவசர வேலை ஒன்று வந்து விட்டது. நான் உன்னை அழைத்து வருவதற்காக கார் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு அலுவலகத்தில் தான் உள்ளேன்.

நான் சொல்லும் இடத்தில் இரங்கி நில் என் நண்பன் உன்னை அழைத்து வர் வருவான் பயப்படாதே அவனோடு வா” என்று தனது நண்பனின் அடையாளம் என தன்னுடைய அடையாளத்தை கூறி நண்பனின் தொலைபேசி இலக்கம் என வேறு ஒரு புது தொலைபேசி இலக்கத்தiயும் கொடுத்துள்ளான்.

வயது முதிர்ச்சியோ முன் அனுபவமோ இல்லாத குறித்த இளம் பெண் தனது பேஸ்புக் காதலன் பேரில் சந்தேகம் தோன்றவில்லை.

பஸ்ஸில் இருந்து இறங்கிய பெண் தனது காதலன் நண்பனின் தொலைபேசி இலக்கம் என கூறி கொடுத்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அடுத்த நொடிகளில் இளைஞன் ஒருவர் “நான் உங்களது நண்பனின் வேலைக்காகவே வந்தேன் வாருங்கள் செல்வோம்” என்று கூறி பஸ் ஒன்றில் ஏற்றியுள்ளார்.

சற்று தூரம் சென்ற பின் பஸ்ஸில் இருந்து இறங்கி சிற்றுண்டிச்சாலைக்கு சென்று கொத்து ரொட்டியும் குளிர்பாணம் இரண்டு போத்தல்களும் வேண்டிக் கொண்டு “நாங்கள் இன்னும் கொஞ்ச தூரம் தான் போக இருக்கிறது” என்று கூறி வேறு ஒரு பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

சற்று நேரம் கழித்து தூக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்த போது அவள் இருந்தது பலங்கொடை நகரில் அதன் பிறகு குறித்த இளைஞர் “ நாங்கள் இப்போது அக்காவினுடைய வீட்டிற்கு செல்வோம் உங்களுடைய நண்பனுக்கு நாளை அங்கு வர சொல்லி சொல்வோம்” என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு ஹந்தகிரிய எனும் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அன்றிரவு இளம்பெண்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இவ்வாறிருக்க தங்களது மகளை வீட்டில் காணாத பெற்றோர் மகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்;டுள்ளனர்.

மறு நாள் காலை தனக்கு நடந்த கொடுமையை பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி இளம் பெண் கூறியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸாருடன் சென்று பெண்னை தேடிப் பிடித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய குறித்த நபர் பெண்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.