உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Image result for மஹிந்த தேசப்பிரிய virakesari

நள்ளிரவிற்குப் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் எவருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறை­கொண்ட கலப்புத் தேர்தல் முறை­யூ­டான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நாடு தழு­விய ரீதியில் நடை­பெ­ற­வுள்­ளது. இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபைகள், 24 மாந­கர சபைகள், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக நடை­பெ­ற­வுள்ள அத்­தேர்­த­லி­னூ­டாக எண்­ணா­யி­ரத்து முந்நூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

அத்­துடன் குறித்த தேர்­த­லுக்­காக நாடு தழு­விய ரீதியில் பதின்­மூன்­றா­யிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பெரும்­பா­லான வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்­கெண்ணும் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 

இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், சட்டமீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நீதியானதும், நியாயமுமான தேர்தலை நடத்துவதற்கு சட்ட வரம்பிற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.