இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகமான The Real Poseidon ஒரே நாளில் மூடப்பட்டது.

இந்தியாவில் ஏராளமான உணவகங்கள் நீருக்குள் இருப்பது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் பாரத் பட் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான The Real Poseidon என்ற சைவ உணவகம் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடங்கப்பட்ட ஒரே நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ் உணவகம் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஹமதாபாத் பொலிஸ் ஆய்வாளர் தேவங் தேசாய் கருத்து தெரிவிக்கையில் , நீருக்கடியில் உணவகம் கட்ட முறையான அனுமதி பெறவில்லை, அதுமட்டுமின்றி அக்வாரியத்தில் தண்ணீர் கசிகிறது.

எனவே, தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இவ் உணவகம் மூடப்பட்டுவிட்டது, அனுமதி பெற்றபின் உணவகம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் , பாரத் பட்டோ அதிகாரிகளின் இக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன் தமது உணவகத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்