கட்டுநாயக்கவில் பாரிய விமானம் அவசரமாக தரையிறக்கம்! காரணம் என்ன?

Published By: Robert

25 Dec, 2017 | 12:45 PM
image

பிரான்சில் தயாரிக்கப்பட்ட A - 380 எயார் பஸ் விமானம் இன்று அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரான்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2.50 மணியளவில நியூசிலாந்து ஒக்லாந்து நகரில் இருந்து டுபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடுவானில் வைத்து விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விமானி அறிந்து கொண்டுள்ளார்.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவித்து விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 400 பயணிகள் மற்றும் 30 ஊழியர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர். இந்த விமானத்திற்கு ஜெட் A- 1 ரக எரிபொருள் 30000 லீற்றர் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த விமானம் எமிரேடைஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் ஒன்றாகும். இவ்வாறான நூறுக்கு அதிகமான விமானங்கள் அந்த விமான நிறுவனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18