ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் புலனாய்வு நிலையத்துக்கு அருகிலேயே இன்று தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத குழுவினர் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காபூலிலுள்ள தேசிய புலனாய்வுத்துறை பயிற்சி நிலையத்தை இம்மாத நடுப்பகுதியில் பயங்கரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.