அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் "பியர்-39" என்ற சுற்றுலா தலம் உள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி அங்கு ஏராளமானோர் கூடுவது வழக்கம்.

எனவே அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புலனாய்வு அமைப்பின் ‘எப்.பி.ஐ’ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

கலிபோர்னியா மாகாணம் மோடஸ்டோ பகுதியில் நடந்த சோதனையில் 26 வயதான எவரிட் ஆரோன் ஜேம்சன்  என்ற நபர் கைது செய்யப்பட்டதோடு. அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள்  போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜேம்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பியர்-39 என்ற இடத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையான மரைன் கார்ப்ஸ் படை பிரிவில் முன்னாள் ரரணுவ வீரராக இருந்தார். 2009ஆம் ஆண்டு இணைந்த ஜேம்சன் ஆஸ்துமா நோய் பாதிப்பால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.எஸ். ஆதரவாளரான ஜேம்சன்  பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுதி பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது சாரதியாக இருக்கும் அவர் பியர்-39 சுற்றுலா தலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்கொலை செய்து கொள்ளவும் கதி திட்டம் தீட்டியிருந்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.