அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப் பகுதியில் வைத்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு வேளைகளில் காட்டுகளில் மிருக வேட்டையில் சிலர் ஈடுப்படுவதாக திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.