உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்­பித்­துள்ள நிலையில் எதிர்­வரும் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திக­தி­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இரு­வேறு முக்­கிய கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. 

28ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்கா ஞாபகா ர்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள், பிர­தி­நி­திகள் பங்­கேற்கும் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை வெற்றி கொள்­வ­தற்­காக பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் கூட்­டாக சுதந்­திரக் கட்சி முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தோடு திட்­ட­மிடல்கள் சிலவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. 

இதே­வேளை மறு­தி­ன­மான 29ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பா­ளர்கள் அனை­வரும் பங்­கேற்கும் விசேட கருத்­த­ரங்­கொன்றும் நடை­பெ­ற­வுள்­ளது.

சுகத­தாஸ உள்­ளக அரங்கில் நடை­பெ­ற­வுள்ள இந்த கருத்­த­ரங்­கிற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்­க­வுள்ளார். இதன்­போது உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை சிறப்­பாக முகங்­கொ­டுப்­பது தொடர்­பா­கவும், கட்­சியின் கொள்கை விடயங்களையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரதான தொனிப்பொருள் மற்றும் பரப்புரைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.