டார்லிங் - 2

Published By: Robert

07 Feb, 2016 | 02:29 PM
image

தன்னை நிரூபித்து வென்ற ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது சந்தோஷமான பெருமைக்குரிய விசயம் அல்லவா ?

சென்ற வருடம் அப்படி வென்ற படங்களில் மிக அட்டகாசமான வெற்றியைப் பெற்ற படம் டார்லிங்.  

அதுவரை இல்லாத அளவுக்கு மிக ஏராளமான பொருட்செலவில் உருவான ஒரு படத்தோடு சேர்ந்து திரைக்கு வந்து,  டார்லிங் படம் பெருவெற்றியைப் பெற்றது என்பதுதான் அந்த வெற்றிக்கே சிறப்பான ஒரு அம்சம் ! 

டார்லிங் படத்தின் வெற்றியை அப்படி நிர்மாணித்த சிற்பி ஸ்டுடியோ கிரீன் அதிபர் கே.ஈ. ஞானவேல் ராஜா . 

எல்லாரும் பார்த்து பொறாமைப் பட்ட - படுகிற - அதே  திட்டமிடலோடு, அதே வெற்றி வரலாறு மீண்டும் ஒரு முறை அவராலேயே எழுதப்பட இருக்கிறது டார்லிங் -2  படம் மூலமாக .!  

ஜின் என்ற பெயரில் உருவாகத் துவங்கிய  படம்தான் இது,

ஜின் எப்படி டார்லிங் 2 ஆனது ?

இதற்கு வெற்றிப் புன்னகையோடு பதில் சொல்லும் ஞானவேல் ராஜா "  ஒரு பெயரோடு தொடர் பட வரிசையில் வரும் இரண்டாவது படம் கதையிலோ நடிக நடிகையரிலோ முதல் படத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்பது கட்டாயமில்லை. படத்தின் குணாதிசயத்தன்மை ஒன்றாக இருந்தாலே போதும்.


 இந்த டார்லிங்  2 படத்தை இயக்கி இருப்பது அறிமுக இயக்குனரான சதீஷ் சந்திர சேகரன். 

ஐந்து நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறர்கள் என்ற ஒற்றை வரியே என்னை மிகவும் கவர்ந்தது .ஒவ்வொரு காட்சியிலும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்ட திரைக்கதை , இது கண்டிப்பாக வெற்றி பெறும்  என்று கட்டியம் கூறியது . 

மெட்ராஸ் புகழ் கலையரசன்,மற்றும் காளி வெங்கட், அர்ஜுன் , முனீஸ்காந்த் , 'மெட்ராஸ்' ஜானி போன்றவர்களோடு அறிமுகங்களான ரமீஸ் ராஜா மற்றும் மாயா . என்று திறமை மிக்க கலைஞர்களின் கூட்டணி இந்தப் படத்தில் இருந்தது இன்னும் பலம் சேர்த்தது . 

அதோடு ஜின் என்ற பெயரை டார்லிங் -2 என்று மாறுவது பற்றிய யோசனை சிறு தயக்கமும் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது . 

அடுத்த மாத துவக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப் படம் ரசிகப் பெருமக்களின் டார்லிங் ஆக இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை "என்கிறார் உறுதியாக 

சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில, படத்தின் இசையமைப்பாளருக்கு மனதாரப் புகழ் மாலைகள் சூட்டுகிறார் இயக்குனர் சதீஷ் சந்திர சேகரன்.

 "நா ச  காரே சா ..என்று துவங்கும் பாடலைக் கேட்ட பிறகு,  அதைப் படமாக்குவதற்கு முற்றிலும்  புதுமையான ஒரு ஐடியாவே தோன்றியது. பாடலுக்கான தன்மை , லொக்கேஷன், உடைகள் என்று எல்லாவற்றையும் அந்த மெல்லிசைப் பாடலைக் கேட்ட பிறகு வேறு மாதிரியாக திட்டமிட முடிந்தது. அந்த அளவுக்கு அது சிறப்பான பாடல். பாடல் மட்டுமல்ல, படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது .

அதுவும் ஸ்டுடியோ கிரீன் என்கிற மாபெரும் நிறுவனத்துடன் இணைந்து வருவது எங்களுக்கு மிக மிக உற்சாகம் தரும் அரிய வாய்ப்பாக இருக்கிறது. இந்த டார்லிங் -2 திரைப்படம் முதல் படமான டார்லிங்கின் பொருத்தமான தொடர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை " என்கிறார் நம்பிக்கையோடு .

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்தியின் 'சர்தார் 2'

2024-07-13 18:57:21
news-image

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' டீசர் வெளியீடு

2024-07-13 18:58:37
news-image

மணிரத்னம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானியின் 'காந்தாரி'...

2024-07-13 18:28:20
news-image

நயன்தாரா நடிப்பில் தயாராகும் 'மூக்குத்தி அம்மன்...

2024-07-13 18:24:20
news-image

இயக்குநர் அட்லி வெளியிட்ட 'மிஸ்டர் ஹவுஸ்...

2024-07-13 18:21:04
news-image

டீன்ஸ் - விமர்சனம்

2024-07-13 16:01:34
news-image

டட்டூவை மையப்படுத்தி தயாராகும் 'லவ் இங்க்'

2024-07-13 11:08:19
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்...

2024-07-13 10:51:25
news-image

இந்தியன் 2 - விமர்சனம்

2024-07-13 09:50:54
news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39