60 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!!

Published By: Digital Desk 7

23 Dec, 2017 | 04:09 PM
image

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம - சந்திரிகாமம் வனப்குதியில் விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து படுங்காயம்பட்டு கிடந்த நிலையில், மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை 9 மணியளவில் விறகு எடுக்க செல்வதாக வீட்டில் உறவினர்களிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு திரும்பாமையினால் அவரது குடும்பத்தினர் டயகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து பொலிஸாரும், குடும்பத்தாரும் ஊர் பொதுமக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி இன்று  காலை 6.30 மணியளவில் காயம்பட்டு விழுந்து கிடந்த நிலையில் குறித்த நபரை கண்டுள்ளனர்.

உயிருடன் மீட்ட நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம தோட்டத்தைச் சேர்ந்த 48 வயதான சூசை சவரியார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையென டயகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் டயகம வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41