இந்தியா - ஹைதராபாத்தில்  காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞரால் கொடூரமான முறையில் வீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக  பணிபுரிந்த  22 வயது இளம்பெண், அலுவலகத்தில் வேலையை முடித்து மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞர் குறித்தத பெண்ணிடம்  பேசுவதற்காக வண்டியை நிறுத்தி தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென்று மறைத்து வைத்திருந்த கேனை உருவி அதிலிருந்த மண்ணெண்ணையை பெண்ணின் மீது ஊற்றி, எரித்துவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.

 

சாலையிலேயே இளம்பெண் உயிருடன் எரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

60% தீக்காயத்திற்கு உள்ளாகியிருந்த பெண்  இன்று காலை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதும் கடந்த சில மாதங்களாக குறித்த இளைஞர் குறித்த பெண்னை பின் தொடர்ந்து வந்ததும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது காதலை ஏற்க மறுத்ததாலேயே சந்தியாவை தீயிட்டு கொளுத்தியதாக கார்த்திக் காவல் துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். கார்த்திக்கு கடந்த ஒரு வருடமாக வேலை இல்லை எனவும் சந்தியாவிடம் திருமணம் புரிந்துகொள்ள வற்புறுத்தியதாகவும்இ இதனை ஏற்க மறுத்ததாலேயே அவர் சந்தியாவை தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.