கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து 38 மீனவர்களும்  யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில்  இருந்த 160 மீனவர்களில் நேற்று வரை 20 மீனவர்கள் மட்டும்மே விடுதலை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.