விளையாட்டு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நினைவு முத்திரையும் முதல்நாள் அஞ்சல் உறையும் வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் அஞ்சல் உறை விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜயசேகரவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் போது ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தினேஸ் பிரியந்த ஹேரத்திற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 இலட்சம் ரூபாவும் விளையாட்டு அமைச்சின் நிதியத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்படுவதற்கான காசோலைகள் ஜனாதிபதியால் தினேஸ் பிரியந்த ஹேரத்திற்கு வழங்கப்பட்டதுடன் இதன்போது அவரின் பயிற்சியாளரான பிரதீப் நிசாந்த அப்புகாமியும் இணைந்து கொண்டனர்.

விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார, தேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க, விளையாட்டு அமைச்சின் ஆலோசகர் சுசந்திகா ஜயசிங்க இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.