தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். தமிழில் தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் தயாராகும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளரும், இயக்குநருமான கோனா வெங்கட் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்