உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; 1500 வேட்பு மனுக்கள் தாக்கல், 29 மனுக்கள் நிராகரிப்பு

By Priyatharshan

22 Dec, 2017 | 11:46 AM
image

எதிர்வரும் பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி  நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 1500 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும்  சுயேச்சைக் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்டன.  அத்துடன்  நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.   

93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான  முதலாம் கட்ட வேட்பு மனுத்தாக்கல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. அதற்கிணங்க 17 மாநகர சபை, 23 நகரசபை, 208 பிரதேச சபை உள்ளடங்கலாக 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களிலேயே   29  வேட்பு மனுக்கள்   நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அநுராதபுரம் திரப்பண பிரதேச சபை, யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச சபை, வலி வடக்கு பிரதேச சபை, யாழ். மாநகர சபை, வலி கிழக்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டடுள்ளன. மேலும் தமிழர் விடுதலை கூட்டணி யாழ். மாநகர சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு பகுதியளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெலிகம பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு, திக்வெல்ல பிரதேச சபைக்காக மவ்பிம மக்கள் கட்சி தாக்கல் செய்த வேட்புமனு, கொழும்பு மாநகர சபைக்காக தேசிய மக்கள் கட்சி தாக்கல் செய்த வேட்புமனு, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபைக்காக ஐக்கிய சமாஜவாதி கட்சி தாக்கல் செய்த வேட்புமனு, கெஸ்பேவ நகர சபைக்கு சுயாதீன குழு ஒன்று தாக்கல் செய்த வேட்புமனு, வெலிகந்த பிரதேச சபைக்காக ஜனசெத பெரமுன தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு மாநகர சபைக்காக அகில தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவும் தேசிய மக்கள் கட்சி கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்காகத் தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் திரப்பண பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் கட்சி செயலாளரின் கையொப்பம் உறுதி செய்யப்படாததனாலேயே  நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெலிகம பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதித்துவம் இன்மையால் அவ்வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்காக தேசிய மக்கள் கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட அபேட்சகர்கள் உள்ளடக்கப்படாமையினால் அவ்வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்காக ஐக்கிய சமாஜவாதி கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அபேட்சகர்கள் உள்ளடக்கப்பட்டமையினால் அவ்வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல், மட்டகளப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.

அங்கு 81 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன்  அதில் 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசிய மக்கள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு மாநகரசபைக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் காத்தான்குடி மாநகரசபைக்காக 8 அரசியல் கட்சிகளும் 3 சுயேச்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

போரதீவுபற்று மாநகரசபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மண்முனை தென் எருவில் பிரதேசசபைக்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சைக்குழுவும், மண்முனை தென் பிரதேசசபைக்காக 7 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழுவினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை முன்னணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன.   

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில்  உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதில் 60 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபை, அம்பாறை நகரசபை உள்ளிட்ட தமண, உஹன, மகாஓயா, பொத்துவில், நிந்தவூர், திருக்கோவில் ஆகிய 8 சபைகளுக்கான வேட்புமனுக்களே ஏற்றுக்ககொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் 61 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திய போதிலும் 59 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக்குழுக்களுமே வேட்புமனு தாக்கல் செய்தன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் நெடுந்தீவு, வலிகாமல் வடக்கு, வலிகாமம் கிழக்கு, யாழ் மாநகரசபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இம்முறை யாழ் தேர்தல் தொகுதியில் 120 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக்குழுவும் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதில் எதுவும்  நிராகரிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

வவுனியாவில் 12 அரசியல் கட்சிகளும் 5 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தன. அதில் வவுனியா பிரதேச சபைக்கு 10 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. 

வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு 4 அரசியல் கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்புமனு தாக்கல் செய்தன. வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கு 8 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. இதன் அடிப்படியில் வவுனியா மாவட்டத்தில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 60 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டம்

பதுளை மாவட்டத்தில் 7 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 40 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இம்மாட்டத்தில் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 71 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்ககப்பட்டுள்ளன. காத்தான்குடி நகர சபைக்கு தாக்குல் செய்யப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவும், கோரளைப் பற்று வடக்கு பிரேதசபைக்கு தாக்கல்செய்யப்பட்ட ஒரு வேட்புமனுவும் நிராரிக்கப்பட்டன.

காலி மாவட்டம்

காலி மாவட்டத்தில் 15 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு வேட்பு மனுவும் நிராரிக்கப்படவில்லை. 

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 42 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்திலும் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 72 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்திலும் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

கேகாலை மாவட்டம்

கேகாலை மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 29 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்திலும் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

குருணாகல் மாவட்டம்

குருணாகல் மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 107 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ரிதிகம பிரேதசபைக்கு அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவும், பொல்காவலை பிரதேச சபைக்கு அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவும், மஹாவ பிரேதசபைக்கான அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவும், பொல்பிதிகம பிரதேசபைக்கு சுயேட்சை குழு ஒன்றின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 61 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இங்கு இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வெலிகம பிரேச சபைக்கான அரிசியல் கட்சி ஒன்றின் வேட்புமனுவும், திக்வெல்ல பிரதேசசைபயின் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவும் நிராரிக்கப்பட்டுள்ளன.

மொனறாகலை மாவட்டம்

மொனறாகலை மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 28 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. புத்தள பிரதேச சபையின் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனு நிராரிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டம்

புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 62 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. 55 வேட்பு மனுக்கள் கட்சிகள் சார்பிலும் 7 வேட்பு மனுக்கள் சுயேட்சை குழுக்கல் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தப் மாவட்த்தில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி  மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 47 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. 41  வேட்பு மனுக்கள் கட்சிகள் சார்பிலும் 6 வேட்பு மனுக்கள் சுயேட்சை குழுக்கல் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 66 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

கம்பஹா

கம்பஹா மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க - சீதுவ நகரசபைக்கான அரசியல் கட்சி ஒன்றின் வேட்பு மனுவே நிராரிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

கண்டி  மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 114 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரிஸ்பத்துவ பிரதேச சபைக்கான சுயேட்சைக் குழு ஒன்றின் வேட்பு மனுவே நிராரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தொகுதிவாரி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறையூடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கென நாட்டில் இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக 341 உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில்...

2022-10-05 16:48:48
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு...

2022-10-05 21:37:06
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12