கணி­னியில்  பல காணொளி விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வதை நோய்கள் தொடர்­பான சர்­வ­தேச பட்­டி­யலில் எதிர்­வரும் வருடம் முதல் தட­வை­யாக உள்­ள­டக்­க­வுள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வித்­துள்­ளது.

 கணி­னியில் காணொளி விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை ஒரு தசாப்த கால­மாக கண்­கா­ணித்த உலக சுகா­தார ஸ்தாபனம் அள­வுக்­க­தி­க­மாக விளை­யாடும் சில­ருக்கு மன­நலப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதை கண்­ட­றிந்­துள்­ளது. இந்­நி­லையில் இவ்­வாறு கணினி விளை­யாட்டில் ஈடு­ப­டு­வதால் ஏற்­படக் கூடிய உடல் நலப் பாதிப்­புக்கு 'விளை­யாட்டு ஒழுங்­கீனம்'  என  அந்த ஸ்தாபனம் பெயர் சூட்­டி­யுள்­ளது.

 ஏனைய வாழ்க்கை விட­யங்­களை விடவும் கணினி விளை­யாட்டில் தீவிர ஈடு­பாட்டைக் காண்­பிப்­ப­வர்­க­ளுக்கு மேற்­படி நோய் பாதிப்பு உள்­ள­தாக  இனங்­கா­ணப்­ப­டு­வ­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் கூறு­கி­றது.

எனினும்  அற்­க­கோலை அருந்­து­ப­வர்கள் அனை­வ­ருக்கும் அது தொடர்­பான நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தில்லை  என்­பது போன்று கணினி விளையாட்­டு­களை விளை­யாடும்  அனை­வ­ருக்கும் அது தொடர்­பான நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தில்லை எனவும் சில சந்தர்ப்பங்களிலேயே  நோய் பாதிப்பு நிலை ஏற்படுவதாகவும்  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.