தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதினான்கு சபைகளில் போட்டியிடுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபையிலும் இம்புல்பே பிரதேச சபையிலும் கொடக்கவெல பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை மாநகரசபையிலும் மாத்தளை பிரதேச சபையிலும் இறத்தோட்டை பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றது.

கண்டி மாவட்டத்தில் கண்டி மாநகரசபையிலும் நாவலப்பிட்டி நகரசபையிலும் கம்பளை நகரசபையிலும் பன்வில பிரதேச சபையிலும் உடபலாத பிரதேச சபையிலும் குண்டசாலை பிரதேச சபையிலும் மெததும்பர பிரதேச சபையிலும் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.