வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் ம.ஜெயதிலக ஐக்கியதேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் அப்துல்பாரி உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.