மட்டக்களப்பு - வாழைச்சேனை,  கும்புறுமூலை வெம்பு காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.