அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரில் பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு காரில் மிக வேகமாக சென்ற இருவரை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் படுகாயமடைந்த நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் குறித்த தாக்குதல் நடவடிக்கை தீவிரவாத செயற்பாடா? அல்லது மது போதையில் நடந்த விபத்தா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.