கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் 57 பாடசாலைகள் இதற்காக முழுமையாக மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.