கண்டி சிறைச்சாலைகள் வீதியில் கனரக பவுசர்  வண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று  அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் பவுசர் ஓட்டுனரும் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.