நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா - கொலபத்தன பகுதியில் காட்டு பன்றி இறைச்சி 80கிலோவுடன் சந்தேக நபர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

தலவாக்கலை விசேட அதிரடிபடையினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே கொலபத்தன தோட்டபகுதியில் பெருமளவிலான பன்றி இறைச்சியை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யபட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட  80 கிலோ பன்றி இறைச்சியையும் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது குறித்த சந்தேக நபர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளதாகவும், சந்தேக நபருக்கு 6,000 ரூபா தண்டம் விதிக்கபட்டு, பிணை வழங்கபட்டுள்ளதோடு குறித்த இறைச்சி வகைகளை அழித்துவிடுமாறு நாவலபிட்டி பொலிஸாருக்கு, நாவலபிட்டி பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்