மிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவித்து க்ரீன் ரீ என பெயரிடப்பட்டு, பொதி செய்யப்பட்ட நிலையில் போதை பொருட்கள் மீடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பாலத்துறை நாலங்கம் பகுதியில் நேற்று அதிகாலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, 542 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் மீட்கப்படடுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரும் யுவதியொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.