2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 619 குடும்பங்களைச் சேர்ந்த 1520 இலங்கை அகதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தூதரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமக்கு உதவியளித்த அனைவருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.