இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ பய­ண­மாக இலங்கை வந்­துள்ள, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முற்­பகல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவைச் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யுள்ளார்.

இந்தச் சந்­திப்பு, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் இல்­லத்தில் நடை­பெற்­றுள்­ளது.

இலங்­கையில் நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான பணி­யகத்தின் தலை­வ­ராக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பணி­யாற்றி வரு­கிறார்.

இந்த நிலையில், இலங்­கையில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்டு வரும் முயற்­சிகள் தொடர்­பா­கவே சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும், சுஷ்மா சுவ­ராஜும் பேச்­சுக்­களை நடத்­தி­ய­தாக தக­வல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.