கடந்த 2017.12.19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இன்றைய அமைச்சரவை முடிவுகள் வருமாறு,
01. 1951 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க துப்பாக்கி சூட்டு மைதானம் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 06)
தற்போது இலங்கையில் முப்படையினர் மற்றும் இலங்கை பொலிசார் ஆகியோருக்கு மாத்திரமே துப்பாக்கிச் சூடு பயிற்றுவிக்கும் மைதானத்தில் பயிற்சி வழங்கப்படுகின்றது. எனினும் தற்போதைய நிலையில் நாட்டில் பாதுகாப்பு வழங்கும் ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளது. அதனடிப்படையில், ஏனைய தரப்பினருக்கும் துப்பாக்கி சூட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் 1951 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க துப்பாக்கி சூட்டு மைதானம் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. ‘இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனத்தினை’ பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டமயமாக்கல் (விடய இல. 07)
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மை தொடர்பில் தாக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு, அப்பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றாற் போல் பல நடவடிக்கைகளை எடுப்பதற்காக ‘இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனமானது’ 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நோக்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான வகையில் ‘இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனத்தினை’ பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டமயமாக்குவதற்கும், அதற்கு அவசியமான சட்ட மூலத்தினை வரைவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. இலங்கை காடுகள் தீப்பற்றுவதை கட்டுப்படுத்துதல் (விடய இல. 09)
காடுகள் தீப்பற்றி எரிவதை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுக்கும் நோக்கில் காடுகளினுள் தீப்பற்றி பரவுவதை தடுப்பதற்கு ஏதுவான முறையில் கசைந டிநடவள ஏற்படுத்துதல் தீப்பிடிக்கும் காடுகளுக்கு அருகில் தீயணைக்கும் விசேட பிரிவுகளை ஸ்தாபித்தல், பொதுமக்களை அறிவுறுத்தல் போன்ற நிகழ்ச்சி தொடர் ஒன்றினை நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இரத்மலானை விமான நிலையத்தின் சிவில் விமான சேவை பணிகளை விருத்தி செய்தல் (விடய இல.12)
இரத்மலானை விமான நிலையத்தின் ஓடு பாதைக்கு தெற்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற 25 ஏக்கர் அளவிலான பூமிப்பகுதியினை சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்பூமிப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் பகுதியொன்றை இலங்கை விமானப்படையினரின் இணக்கத்துடன், விமான நிலையத்தின் வட பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இருதரப்பு ஆலோசனை இயந்திரம் ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 13)
இருதரப்பு ஆலோசனை இயந்திரம் ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பெல்ஜியத்தின் அரச சேவை வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வியாபாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. ‘நல்லிணக்கத்தின் அலைவரிசை’ க்காக வட மாகாணத்தில் கலையக கட்டிடத் தொகுதி ஒன்றை ஸ்தாபிப்பதற்காக காணியொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல.17)
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவான அய் (Eye) தொலைக்காட்சியில் அதிகமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதனால் தமிழ் பேசும் மக்களுக்கான தேசிய தொலைக்காட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் ‘நல்லிணக்கத்தின் அலைவரிசை’ எனும் பெயரில் புதிய அலைவரிசை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக பிறிதொரு அலைவரிசை எண்னொன்றும் வழங்கப்பட வேண்டும். அதற்கான தொழில்நுப்ட உபகரணங்கள் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக கலையகம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது.
அதனடிப்படையில், சாவகச்சேரி பிரதேசத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியினால் பராமரிக்கப்படுகின்ற காணியில், 100 பேர்ச்சஸ் பூமிப்பகுதியினை இக்கலையக கட்டிடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்காக யாழ் மாவட்ட செயலாளரினால் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
அப்பூமிப்பகுதியினை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்துக்காக கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 20)
இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்துக்காக 06 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. கொழும்பு துறைமுக நகரத்தில் கொழும்பு சர்வதேச நிதி நகரத்துக்கான கட்டிட தொகுதியொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 22)
கொழும்பு துறைமுக நகரத்தில் கொழும்பு சர்வதேச நிதி நகரத்துக்கான கட்டிட தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான முதலீடு 01 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நேரடி வெளிநாட்டு முதலீடாக இந்நிதியினை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான வகையில், China Harbour Engineering Corporation, பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் வரையறுக்கப்பட்ட CHEC கொழும்பு துறைமுக நகர தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பச்சை இறப்பர் மற்றும் இரசாயன ஆய்வு கூடத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 23)
இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட பச்சை இறப்பர் மற்றும் இரசாயன ஆய்வு கூடத்தினை காலத்திற்கு ஏற்றாற் போல் மற்றும் சர்வதேசம் ஏற்றுக் கொண்ட விவகாரங்களுக்கு உட்பட்ட வகையில் நவீனமயப்படுத்தப்பட வேண்டி உள்ளது. அதனடிப்படையில் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பச்சை இறப்பர் மற்றும் இரசாயன ஆய்வு கூடத்தினை நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமாக விருத்தி செய்வது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்துதல் (விடய இல. 26)
இன்று மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையினால் வழக்கு விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குதல் (விடய இல. 27)
இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குவது தொடர்பில் சட்ட கல்வி சபையினால்
தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய 2017-11- 28 ஆம் திகதிய 2047/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.இலங்கை அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக வேண்டி தென் கொரியாவின் கொள்கை மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 30)
இலங்கை அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக வேண்டி இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் தென் கொரியாவின் கொள்கை மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரன்ஜித் மந்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ‘இலங்கை தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்’ மற்றும் ‘இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம்’ ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பு தொடர்பான பாட விதானங்களின் தரம் மற்றும் ஏற்பினை அதிகரித்தல் (விடய இல. 37)
‘இலங்கை தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்’ மற்றும் ‘இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம்’ ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பு தொடர்பான பாட விதானங்களின் தரம் மற்றும் ஏற்பினை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய பல்கலைக்கழகங்களின் பாட விதானங்களில் தரத்தினை அதிகரிப்பதற்காக பின்பற்றப்படுகின்ற அணுகுமுறையினை இதற்கும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் திறமுறை அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14.மற்றும் 15. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது (விடய இல. 38 மற்றும் 39)
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள சுரங்க நீர் மார்க்கத்தினை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவையினை Lhameyer International Gmbh GeoConsult ZT ஒன்றிணைந்த வியாபாரத்துக்கு வழங்குதல்.
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இடது அணை மற்றும் வலது அணை நீர் மார்க்கத்திற்கான நீர் கட்டுப்பாடு மற்றும் அளவீட்டு வசதிகளை வழங்குவது உட்பட மினிப்பே நீர் நிலையினை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,576.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு China Gezhouba Group Company Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல்.
16. புறக்கோட்டை மெனிங் சந்தையினை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றுவதற்கு தேவையான கட்டிடங்களை ஸ்தாபித்தல் (விடய இல. 41)
புறக்கோட்டை மெனிங் சந்தையினை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றுவதற்கு தேவையான கட்டிடங்களை ஸ்தாபிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதன் அடுத்த கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள உப வியூகத்தினை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 4,507 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு மாகா இன்ஜினியரின் தனியார் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. லக் விஜய மின்னுற்பத்தி நிலையத்தின், 02 ஆம் பிரிவின் டர்பய்ன் மற்றும் உரிய பிரதான பாகங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 42)
லக் விஜய மின்னுற்பத்தி நிலையத்தின், 02 ஆம் பிரிவின் டர்பய்ன் மற்றும் உரிய பிரதான பாகங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 263.4 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கிராமிய பாலங்கள் வேலைத்திட்டங்களில் எஞ்சியுள்ள நிதியினை பயன்படுத்தி மேலும் 44 பாலங்களை நிர்மாணித்தல் (விடய இல. 43)
கிராமிய பாலங்கள் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான கால எல்லை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி முடிவடைய உள்ளது. எஞ்சியுள்ள நிதியினை பயன்படுத்தி மேலும் 35 பாலங்களையும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒன்று எனும் வீதத்தில் 09 பாலங்களையும் உள்ளடக்கிய வகையில் அவ்வேலைத்திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக அக்கால எல்லையினை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. ஹோமாகமை, தியகமை முன்மொழியப்பட்டுள்ள விளையாட்டு அகடமியின் ஓடு தளத்தினை உருவாக்குதல் மற்றும் தடகள விளையாட்டு மைதானத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 45)
ஹோமாகமை, தியகமை முன்மொழியப்பட்டுள்ள விளையாட்டு அகடமியின் ஓடு தளத்தினை உருவாக்குதல் மற்றும் தடகள விளையாட்டு மைதானத்தினை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 310 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு CML – MTD Construction Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. ‘சூர்ய பல சங்கிரமய’ வேலைத்திட்டத்தின் கீழ் சிறு அளவிலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் (விடய இல. 48)
‘சூர்ய பல சங்கிரமய’ வேலைத்திட்டத்தின் கீழ் சிறு அளவிலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழு மற்றும் மேன்முறையீட்டு சபையின் சிபார்சின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளருக்கு குறித்த டென்டரினை வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. ‘காபன்’ உணவு உற்பத்தியினை விருத்தி செய்தல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்காக ஏற்றுமதி சந்தையினை திறந்து கொடுத்தல் (விடய இல. 49)
தேசிய உணவு உற்பத்தியினை விருத்தி செய்தல் மற்றும் இலங்கை விவசாய உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்து உயரிய வருமானத்தினை பெற்றுக் கொள்வதற்கு இந்நாட்டு விவசாயிகளுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் காபன் உர வகைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற உணவு உற்பத்தியினை விருத்தி செய்தல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்காக ஏற்றுமதி சந்தையினை திறந்து கொடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிர்மாணிப்பதற்காக இடமொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 50)
கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை காணியில் 01 ஹெக்டேயார் பகுதியினை 2001 ஆம் ஆண்டில் தனியார் தரப்பினருக்கு 30 வருட குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்து. எனினும் அவர்கள் சரியான முறையில் அதனை செலுத்த தவறியுள்ளனர். எனவே குறித்த காணியினை கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிர்மாணிப்பதற்காக விடுவிப்பது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. தென் மாகாணத்தில் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக உத்தியோகபூர்வ வசதிகளை வழங்குதல் (விடய இல. 53)
தென் மாகாணத்தில் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக உத்தியோகபூர்வ வசதிகளை வழங்கும் நோக்கில், காலி, வெகுணகொடை “நில செவன” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் 192 வீடுகளை இலங்கை பொலிசுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான 729.6 மில்லியன் நிதியினை திரட்டிக்கொள்வது தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. புகையிரத திணைக்களத்தின் நிர்வாக, ஊதிய மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் தீர்த்தல் (விடய இல. 54)
இலங்கை புகையிரத திணைக்களத்தின் பணியாளர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பில் உரிய நபர்களுடன் கலந்துரையாடி முடிவொன்றினை எடுப்பதற்காக வேண்டி விசேட பணிப்பொருப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகமவினால் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினையும் நியமிப்பதற்கு சென்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி செயற்பட்ட குறித்த குழு இப்பிரச்சினையினை தீர்ப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கும், புகையிரத, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை ஒன்றிணைந்த சேவையான மீண்டும் தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் தமது சிபார்சுகளை முன்வைத்தது. அதனடிப்படையில், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக அவ் அமைச்சரவை உப குழுவிடம் தொடர்ந்து கேட்டுக் கொள்வதற்கும், அதற்கு ஒத்துழைப்பிற்காக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. வாழ்க்கைச் செலவு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடியறிதல் மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி சலுகைகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 57)
வாழ்க்கைச் செலவு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடியறிதல் மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு ஆகிய குழுக்கள் அடிக்கடி கூடி பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. அதன் போது பெறப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், பின்வரும் செயன்முறைகளை தவறாது மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீட்டு அலகொன்றுக்கு தாக்கு பிடிக்கக் கூடிய விலையில் அத்தியவசிய பொருட்களை வழங்குவதை சாராம்சம் செய்வதற்காக உரிய அதிகாரிகள் அடங்கிய ‘குடும்ப வரவு செலவு பிரிவொன்றை’ ஸ்தாபித்தல்.
குறித்த தீர்மானங்களை செயற்படுத்துவதன் வெற்றியினை உறுதிப்படுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் ஏனைய உரிய அமைச்சின் செயலாளர்களின் கூடிய ஒருங்கிணைப்பு குழுவொன்றினை நியமித்தல்.
சுப்பர் மார்கட், சதொச மற்றும் ஏனைய தனியார் சந்தைகளின் ஊடாக தமிழ், சிங்கள புது வருடம் வரை அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய சலுகை பொதியொன்றை பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துதல்.
அதற்காக பங்குகொள்கின்ற நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மூலம் செலுத்தப்படுகின்ற வருமான வரியில் 50 வீதம் இனை மீள் நிரப்புவதற்கும்ரூபவ் மின்சார செலவிற்காக வரிச்சலுகையினை பெற்றுக் கொடுப்பதற்குமான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.
தேங்காயல் இறக்குமதி தொடர்பில் மேற்பார்வை செய்வதற்காக பொறுப்பினை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு வழங்குதல்.
தேங்காய் இறக்குமதி தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மூலம் பின்பற்றப்படுகின்ற செயன்முறையினை இலங்கையிலும் ஸ்தாபிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளல்.
வெள்ள நிவாரணத்துக்காக தேசிய காப்புறுதி நிதியத்தினால் பெற்றுக் கொடுப்பதற்கு இணங்கியுள்ள நட்ட ஈட்டு தொகை மற்றும் மதிப்பீட்டு பெறுமதிக்கு இடையில் காணப்படுகின்ற வித்தியாசத்தினை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலாளர்களினால் குறித்த நபர்களுக்கு பெற்றுக் கொடுத்தல்.
சீரற்ற காலநிலையினால் பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ள குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாய குடும்பங்களுக்கு சலுகை வழங்குவதை துரிதப்படுத்துதல்.
26. இலங்கையில் காட்டு யானை தொகை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளல் (விடய இல. 58)
இலங்கையில் காட்டு யானை தொகை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதற்கும் அதற்காக வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் களப்பணியாளர்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், காட்டு யானைகளை கொலை செய்வது தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுகின்ற ஆயுள் தண்டனையினை விதிப்பதற்கு ஏதுவான வகையில் வனஜீவிராசிகள் கட்டளைச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான யோசனைகளையும் அமைச்சரவை அனுமதித்துள்ளது.
27. Nanotechnology & Science Park இனை விருத்தி செய்தல் (விடய இல. 59)
காலத்தின் தேவைக்கிணங்க ஹோமாகமை, பிட்டிபனை, மாஹேனவத்தையில் அமைந்துள்ள Nanotechnology & Science Park இனை மேலும் விருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன் அதன் நடவடிக்கைகளை துரித கதியில் செயற்படுத்துவது தொடர்பில் சிஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. இலங்கை சுற்றுலா விருத்தி பணியகத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டினுள் டிஜிட்டல் பிரச்சார வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துதல் (விடய இல. 61)
இலங்கை சுற்றுலா விருத்தி பணியகத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டினுள் டிஜிட்டல் பிரச்சார வேலைத்திட்டமொன்றை பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் சிபார்சின் பெயரில் செயற்படுத்துவதற்கான விலை மனுக்களை கோருவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற விவசாய காப்புறுதி முன்மொழிவு செயன்முறையினை உள்ளடக்குவதற்காக மீள்காப்புறுதி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துதல் (விடய இல. 64)
தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற விவசாய காப்புறுதி முன்மொழிவு செயன்முறையினை உள்ளடக்குவதற்காக மீள்காப்புறுதி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு உகந்த நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்காக கேள்வி மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2018-01- 01 ஆம் திகதியிலிருந்து 2018-12- 31ம் திகதி வரையான காலப்பிரிவிற்காக 257.8 மில்லியன் ரூபா தொகைக்கு அம்மீள்காப்புறுதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூரின் Swiis Re Asia PTE Ltd மற்றும் J.B. Boda & Co (S) PTE Ltd. ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அல்லது தேர்தல்கள் நடைபெறும் கால எல்லையின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் (விடய இல. 65)
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அல்லது தேர்தல்கள் நடைபெறும் கால எல்லையின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் 2017-12- 04 ஆம் திகதிய 2048/1ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமாதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்தல் (விடய இல. 66)
நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமாதிபர் திணைக்களம்ரூபவ் சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்வதற்கான சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் சிபார்சுகளை கவனத்திற் கொண்டு 2018 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமாதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்வதற்கும் அத்திருத்தங்களை கவனத்திற் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளின் திருத்தங்களை பாராளுமன்றத்தில் பிரேரிப்பதற்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM