ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது அமெரிக்கா!!!

Published By: Sindu

20 Dec, 2017 | 01:25 PM
image

ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.

1948ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது.

அதன்பிறகு 1967ஆம் ஆண்டு  நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேத்தை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இவ் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக எகிப்து சார்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் “அமெரிக்காவின் முடிவு சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது, இந்த முடிவை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்”  ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரத்து செய்தது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியபோது,

“ஜெருசலேம் விவகாரத்தில் நன்மைக்குப் பதிலாக ஐ.நா. தீங்கு விளைவிக்கிறது. இஸ்ரேலில் எங்கு தூதரகம் அமைப்பது என்பது அமெரிக்காவின் தனிப்பட்ட விருப்பம். எங்கள் நாட்டின் இறையாண்மையை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமெரிக்காவின் முடிவு குறித்து பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!

2024-03-03 17:29:17
news-image

காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிக‍ளை...

2024-03-03 12:07:35
news-image

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!...

2024-03-03 11:00:41
news-image

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்த...

2024-03-03 10:40:46
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில்...

2024-03-02 12:43:50
news-image

இஸ்ரேல் காசா - உணவு வாகனத்...

2024-03-02 12:29:33
news-image

பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய...

2024-03-02 10:39:50
news-image

கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு...

2024-03-01 14:09:45
news-image

காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த...

2024-03-01 12:40:56
news-image

தென் கொரிய மருத்துவ சங்க அலுவலகங்களில்...

2024-03-01 11:59:44
news-image

காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள்...

2024-03-01 11:11:59
news-image

பங்களாதேஸ் தலைநகரில் உணவகமொன்றில் பெரும் தீ...

2024-03-01 09:44:49