இலங்கையின் தேசிய கையடக்கத் தொலைப்பேசி வழங்குனரான மொபிடெல், RCS2 Technologies (Pvt) Ltd நிறுவனத்துடன் கூட்டிணைந்து பாடசாலை மாணவர்களுக்கான 3D அச்சிடுதல் பயிற்சி முகாம் ஒன்றை கல்வி அமைச்சின் பங்களிப்புடன் சமிபத்தில் ஏற்பாடு செய்தது. 

இலங்கையில் நடைபெற்ற முதலாவது 3D அச்சிடுதல் பயிற்சி முகாமில் மாணவர்களிடையே தொழில்நுட்ப பெருக்கத்தையும் அதன் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக மொபிடெலின் Internet of Things (IoT) மையமான X Station இல் இதனை நடத்தியது. 

X Station மூலமாக ஏற்கனவே மக்களுக்கு 3D தொழில்நுட்பத்தின் அதிசயங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு 3D அச்சிடப்பட்ட மனித உறுப்புகளிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பதிலீட்டுப்பகுதியை அச்சிடுவதற்கு விரிவுபடுத்துகின்ற வரை 3D அச்சிடுதல் என்பது உலகளாவிய பயன்பாடுகளோடு தொடர்புடையது என்பதையும் இதன் மூலம் உணர்த்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது 3D அச்சிடுதல் பயிற்சி முகாமில், ஆனந்தா கல்லூரி, ரோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, அனுலா வித்தியாலயம், நாலந்தா கல்லூரி மற்றும் சிறிமாவோ பாலிகா வித்யாலயம் ஆகிய பாடசாலைகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் ஒவ்வொரு பிரிவிலும் 5 மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்து பாடசாலை மாணவர்களுடனும் இணைத்து ஒரு குழுவில் 5 பேர் இருக்குமாறு குழுக்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு செயற்பாடு வழங்கப்பட்டது. 3D அச்சுப்பொறி, ஒரு கணினி மற்றும் ஒரு மின்னணு மேம்பாட்டு கிட் என்பவற்றை பயன்படுத்தி ஒரு மினி ரோபோவை உருவாக்கினார்கள். ஒவ்வொரு குழுவும் தங்கள் தயாரிப்புக்களை நடுவர்களிடம் முன்வைக்க அதிலிருந்து வெற்றியாளரும் இரண்டாம் நிலை வெற்றியாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மொபிடெலின் 3D அச்சு முகாமானது ஒரு புதிய தொழில்நுட்ப போக்கான 3D அச்சு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த உதவியது. மாணவர்களுக்கு 3D அச்சிடுதலை அறிவூட்டும் இந்த பணியில் கல்வி அமைச்சு முக்கிய பங்காற்றியுள்ளது எனலாம். RCS2 Technologies, இலங்கையில் THRIMANA 3D அச்சுப்பொறிகளை உற்பத்தி செய்கின்றது. 

ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய 3D அச்சு தொழில்நுட்ப நாளான டிசம்பர் 3ஆம் திகதி இந்த பயிற்சி முகாமை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொபிடெல், நாட்டில் ICT தலைவர்களை உருவாக்கும் விதமாகவும் இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை எளிமைப்படுத்த தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி சிறப்புறவும் வழிவகை செய்கின்றது.