நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருகின்றதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக தலவாக்கலை, அட்டன், கொட்டகலை, டயகம, எல்ஜின் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதோடு கடும் பனி மூட்டமும் நிலவுகின்றதுடன் தலவாக்கலை பிரதேசத்தில் மின்சார விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. 

மேலும் அட்டன் - நுவரெலியா, அட்டன் - கினிகத்தேனை, தலவாக்கலை - நாவலப்பிட்டி, தலவாக்கலை - பூண்டுலோயா ஆகிய வீதிகளில் பனி மூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.