“அஸ்பெஸ்டோஸ்” (asbestos sheet) கூரைத் தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் “அஸ்பெஸ்டோஸ்” கூரைத் தகடுகளின் உற்பத்தி மற்றும் இறக்குமதிகளுக்கு தடை விதிக்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு இரத்ததுச் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.