சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மனித உரிமை விவகாரங்களில் ஆதரவு வழங்குவதற்கு மலேசிய தயாரக இருப்பதாக மலேசிய பிரதமர் அப்துல் ரஷாக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். 

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரஷாக் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மலேசியா ஆதரவு வழங்கியமை தொடர்பிலும் ஏனைய சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றமை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தார்.

இந்த இருதரப்பு சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ராஜித சேனாரத்ன, சுசில் பிரேமஜயந்த, மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக்க , தலதா அத்துக்கோரள உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.