யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் மைனர் அப்புத்துரை தலமையிலான சுயேச்சை குழுவினரே காரைநகர் பிரதேசபையின் ஆறு வட்டாரங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட சுயேச்சை குழுவொன்று யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களகத்தில் கட்டுபணத்தை செலுத்தியுள்ளது.

கோமதி ரவிதாஸ் தலைமையிலேயே நல்லூர் பிரதேசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சை  குழுவொன்று இன்று காலை கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.