விலையுயர்ந்த மூலப்பொருட்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு

Published By: Priyatharshan

19 Dec, 2017 | 02:07 PM
image

இன்றைய கால கட்டத்தில் காணப்படும் பெருமளவான முதலீட்டுத்தெரிவுகளிலிருந்து அதிகளவு வருமானமீட்டுவது என்பதை பல நபர்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் தமது ஓய்வு காலத்துக்காக பெருமளவு தொகையை பெற்றுக்கொள்வதுரூபவ் சிறுவர்களின் எதிர்கால கல்விச்செலவுகளை ஈடுசெய்வது மற்றும் இதர செலவுகளுக்காக தொகையை சேமித்துக்கொள்வது என்பது கடினமான காரியமாக அமைந்துள்ளது.

பெருமளவான முதலீட்டாளர்கள் தற்போது வணிக வனாந்தர செய்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். புவிக்கு இது அனுகூலமளிப்பதாக அமைந்திருப்பது மட்டுமின்றிரூபவ் புவி வெப்பமடைதலை தணிப்பதற்கும் உதவியாக அமைந்திருப்பதுடன் பச்சை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தவும் உதவியாக அமைந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு எட்டு வருடங்களில் இந்த முதலீடுகளிலிருந்து பெருமளவு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையில் வணிக வனாந்தரச்செய்கையில் முன்னோடியாகத்திகழும் சதாஹரித பிளான்டேஷன்ஸ், தேசிய சூழல் பாதுகாப்பு விருதுகளில் தங்க விருதை சுவீகரித்துள்ளதுடன், 2000க்கும் அதிகமான ஏக்கர் வனாந்தரச்செய்கையை பராமரித்து வருகிறது. குறிப்பாக சந்தனம், தேக்கு, மஹோகனி, ரம்புட்டான் மற்றும் அகர்வுட் போன்றன.

இந்தச்செய்கைகளில் அடங்கியுள்ளன. சூழலை பாதுகாத்துக்கொள்ள இந்த முதலீடுகள் உதவுவதுடன், எதிர்காலத்தில் சிறந்த வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன.

சதாஹரித பிளான்டேஷன்ஸ் தலைவர் சதிஷ் நவரட்ன கருத்துத்தெரிவிக்கையில்,

“இலங்கையில் நாம் 26000 க்கும் அதிகமான நீண்ட கால வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம். வெளிநாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் எம்முடன் இணைந்து கொண்ட வண்ணமுள்ளனர். குறிப்பாக அகர்வுட் மீது அதிகளவு நாட்டம் காணப்படுவதுடன் அகர்வுட் விளைச்சலுக்கு சர்வதேச ரீதியில் அதிகளவு கேள்வியும் காணப்படுகிறது. உலகின் விலையுயர்ந்த வாசனைத்திரவியங்கள் தயாரிப்புக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாய்ப்பினூடாக சகல பகுதிகளையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் பயன்பெற திட்டமிட்டுள்ளனர்”.

“அகர்வுட்டை பொறுத்தமட்டில் உயர் தரம் வாய்ந்த அகர்வுட் பிரித்தெடுப்பு, உலகின் மிக விலை உயர்ந்த மூலப்பொருளாகும். கிலோகிராம் ஒன்று 50,000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதி வாய்ந்தது. அகர்வுட் எண்ணெய் கிலோகிராம் ஒன்று 30,000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதி வாய்ந்தது. நாம் 344 ஏக்கர் நிலப்பரப்பில் அகர்வுட் செய்கையை மேற்கொண்டுள்ளோம். இதனை விஸ்தரித்து வருகிறோம்” என்றார்.

வேகமாக அழிந்து வரும் இனமாக அகர்வுட் காணப்படுகின்றமை காரணமாக இது விலை உயர்ந்ததாக அமைந்துள்ளது. சில அகர்வுட் இனங்கள் Convention on International Trade in Endangered Species (CITES) of Wild Fauna and Flora மற்றும் International Union for Conservation of Nature (IUCN) இனால் பாதுகாக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40
news-image

இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்தல் : சிறு...

2024-08-13 21:09:24
news-image

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன்...

2024-08-09 16:42:11