சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா....?

Published By: Robert

19 Dec, 2017 | 12:11 PM
image

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் 'ஆயுள்காரகன்' எனப் போற்றப்படும் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக்களையும் கிரக மூர்த்தி இவர். சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இருகரம் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர்.

வானியல்படி, சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் உள்ள பாதையில் சுற்றி வரும் சனி, மற்ற கிரகங்களைவிட மிக மெதுவாகச் சுழல்கிறார். இவர், ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஆகும்; ராசி மண்டலத்தைக் கடக்க சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே இவரை, 'மந்தன்' என்பார்கள். காரி, முடவன், காகம் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு. காசிக்குச் சென்ற சனிபகவான், அங்கே லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வந்தாராம். இதன் பலனால் சிவபெருமானின் அருளைப் பெற்று, இவர் நவக்கிரக வரிசையில் இடம்பெற்றதாகவும், மகேஸ்வரன் அருளால் இவருக்கு 'ஈஸ்வர' பட்டம் கிடைத்ததாகவும் சொல்கின்றன புராணங்கள். தன்னைப் போன்றே சிவனருள் பெற்ற அடியவர்களுக்கு எல்லா நலன்களையும் அள்ளி வழங்கும் மூர்த்தி இவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்திருக்கிறார் எனில், நாட்டுக்கே தலைவராகும் வாய்ப்பு அந்த நபருக்குக் கிடைக்குமாம்!

இவ்வாறான சனிபகவான்  இன்று மாற்றமடைகின்றார். இதனை முன்னிட்டு 12 ராசிகாரர்களுக்குமான பொதுபலன் எவ்வாறு உள்ளதென்று  இந்தியாவிலிருந்து ஜோதிட கலைமாமணி குமாரசாமி கேசரிக்காக வழங்குகின்றார். 

நிகழும் மங்களகரமான இன்று ஹேவிளம்பி வருடம் 19.12.2017 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 9.57  நிமிடத்திற்கு சனிபகவான் மூலம் 1 ஆம் பாதத்தில் தனுசு இராசியில் பிரவேசம் செய்யவுள்ளார். இதனால் பன்னிரெண்டு இராசிகளுக்கும் சுப பலன்களை வாரி வழங்க உள்ளார். சனிபகவான் சுப பலன்கள் எந்த எந்த இராசிகளுக்கு வழங்குவார் என்பதை தெளிவாக பார்ப்போம்.;

கேள்வி: சனி பகவான் என்றாலே  மக்கள் அஞ்சுகின்றனரே-? சனிபார்வை என்பது கொடி யதா  

பதில்: சனிபகவான் என்பவர் கெட்டது செய்யமாட்டார். ஜாதக அமைப்புக்கு ஏற்ப சில இன்னல்கள் துன்பங்கள் வரும்.  ஒரு ஜாதகத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப  சனிபகவான் அமையும் இடத்தை பொறுத்தே  நன்மை தீமைகள் அமையும்.

கேள்வி: சனிபார்வையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்

பதில்: ஆஞ்சநேயர் வழிபாடு உகந்தது. ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டால் சனிபகவானின் கோர பார்வையிலிருந்து தப்பிக்கலாம். 

ஏழரை சனியின்போது திருநல் லாறு  பொங்குசனியின் போது திருக்கொள் ளிக்காடு தலங்களை வழிபடுவது மிகச் சிறப்பு . சனிமாற்றத்தன்றே இதனை வழிபடுவது எல்லோராலும் முடியாது ஆயினும் ஒரு மண்டலத்துக்குள் அதாவது 48 நாட்களுக்குள் வழிபாடு செய்ய லாம்.

கேள்வி: யாரை எல்லாம் வாட்டுவார்...

பதில்: பிறப்பு ஜாதகத்துக்கு அமையவே அவரது பார்வையின் தாக்கம் காணப்படும் .

கேள்வி:சனிக்கிழமை பிறப்பது பூப்பெய்வது என்பதற்கு சனிதாக்கத்துக்கும் சம்மந்தம் உண்டா..

பதில்: அப்படியெல்லாம் எதுவும் சம்பந்தம் இல்லை. 

மேஷம்

தைரியமும் தன்னம்பிக்கையும்பெற்ற மேஷ இராசி அன்பர்களே! இதுவரை அஸ்டமத்தில் இருந்த பகவான் 9 ஆம் இடத்துக்கு வருவது மேன்மை. இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த மனக்குறைகள் நிவர்த்தி பெறும். பூர்வீகத்தில் இருந்துவந்த கருத்து முரண்பாடு மறையும். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உருவாகும். பகைமை மறையும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை. எடுத்த காரியத்தில் வெற்றி. மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு சுப பலன்களை சனி பகவான் வழங்க உள்ளார். இதுவரை  இருந்துவந்த வைத்திய செலவுகள் அனைத்தும் நிவர்த்திபெறும். 19.12.2017 சனி பெயர்ச்சி பெயர், புகழ், கீர்த்தி அனைத்தையும் அடையமுடியும். பொதுவில் சனி பெயர்ச்சி அனைத்து நன்மைகளையும் வழங்கும். சனி பகவான் 3, 6, 11 ஆம் இடங்களின் பார்வை யோகப் பார்வை.

ரிஷபம்

உதவி செய்வதையே குறிக்கோளாக கொண்ட ரிஷப இராசி அன் பர்களே! இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் 8ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால் அஸ்தம ஸ்தான சனியால் நன்மைகள் நடைபெறும். ரிஷபத்திற்கு சனி யோகவான் என்பதால் தீய பலன்களை விட சுப பலன்களை அதிகமாக வாரி வழங்குவார். வீடு, மனை யோகமும் வாகன யோகமும் கிட்டும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தி பெறும். இப்பொழுது சனி பார்வை 2, 5, 10 இடங் களில் பார்வை செய்வதால் பூர்வீகத்தில் இருந்துவந்த சிரமங்கள் நிவர்த்தியடையும். மேலதிகாரிகளால் மனச்சஞ்சலம் நிவர்த்தியடையும். மாண வர்களின் கல்வியில் மேன்மை. வழக்கு விசயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியடையும்.

மிதுனம்

சமயோசிதமாக பேசி காரியம் சாதிக்கும் மிதுன இராசி அன்பர்களே! சனிபகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ஆம் இடத்திற்கு விஜயம் செய்வது விசேடமில்லை. இதை கண்ட சனி என்பார்கள். உடல் நிலையில் இரத்த நாளங்கள், நரம்புத் தளர்ச்சி, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வைத்தியசெலவு ஏற்பட வாய்ப்புண்டு. சனிபகவான் 5,7,10 ஆம் இடங்களில் பார்வை செய்வதால் தொழில் முடக்கம், கணவன் மனைவி உறவில் கருத்து முரண்பாடு, அரசு சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றி மறையும். துணிவு, தன்னம்பிக்கை குறையும். உடன் பிறப்புகளில் கருத்து முரண்பாடு. மேலும் குலதெய்வ வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பளிக்கும். திருநள்ளாறு, திருகொள்ளகுடி சென்று சனிபகவானை பிரார்த்தனை செய்வது விசேடம் எனலாம். எல்லாம் வல்ல இறைவனால்  நன்மையே நடக்கும்.

கடகம்

பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக இராசி அன்பர்களே! உங்கள் இராசிக்கு 7, 8 ஆம் அதிபதியானவர் சனிபகவான் 6 ஆம் இடத் 

திற்கு வருவதால், விபரீத இராஜயோகம். எனவே திட்டமிடாமல் நீங் கள் செய்யும் காரியங்கள்கூட வெற்றியடையும். 6 ஆம் இடம் ஜீவன ஸ்தானம். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகளால் கட்டாய ஓய்வு எடுப் 

பதற்கு வாய்ப்புண்டு. நண்பர்களால் கூட்டு தொழில் ஏற்பட வாய்ப் புண்டு. சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து முரண்பாடு நிவர்த்தியடையும். வழக்கு விசயங்களில் தங்களுக்கு வெற்றி நிச்சயம். தெசாபுத்தி வலுவாக இருந்தால் மேன்மையளிக்கும். பொதுவில் சனிபெயர்ச்சி மேன்மை.

சிம்மம்

சரித்திரத்தில் இடம்பெற நினைக்கும் சிம்ம இராசி அன்பர்களே! இதுவரை நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்வது விசேடம். பஞ்சம ஸ்தானத்திற்கு சனிபகவான் வருவது இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் நிவர்த்தி. வழக்கு விசயங்களில் இது வரை  இருந்து வந்த சிரமம் நீங்கும். புதிதாக வீடு மனை, யோகமுண்டு. தொழில் விருத்தி, வாகன விருத்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து முரண்பாடு நிவர்த்தியடையும். புதிய நண்பர்களால் மேன்மை. கடல் கடந்து தொழில் ரீதியாக சென்றுவர யோகமுண்டு. பணப்புழக்கம் திருப்தியளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை. மேலும் தெசாபுத்தி வலுவாக இருந்தால் யோகமளிக்கும்.

கன்னி

எவரையும் தன் வசத்தால் வசியம் செய்யும் கன்னி இராசி அன்பர்களே! இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்து வாட்டி வதைத்த சனிபகவான் 4 ஆம் இடத்திற்கு செல்வதால் விசேட பார்வைகளால் தங்களுக்கு மேன்மையான பலன்கள் வழங்க உள்ளார். தொழிலில் இருந்துவந்த சிரமங்கள் நிவர்த்தியடையும். வீடு, மனை யோகமுமுண்டு. மாணவர்களுக்கு மேன்மை உண்டு. காதலில் இருந்த மனச்சஞ்சலம் நிவர்த்தியடையும். சிலரது ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றால் இன்னும் மேன்மையடையும். சிலரது உடல் நலத்தில் சிறு சஞ்சலம். 19.12.2017 பெயர்ச்சியாகும் சனியால் மேன்மை. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நன்மையே நடக்கும்.

துலாம்

பேச்சாற்றலால் பிறரை கவர்ந்திலுக்கும் துலாம் இராசி அன் பார்களே! இதுவரை  இருந்த ஏழரைச் சனி நிவர்த்தி. தொட்டது துலங்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை. பணப் புழக்கம் திருப்தியளிக்கும். உடல் நலன் திருப்தியளிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து முரண்பாடு தீரும். 

வழக்கு விசயங்களில் இருந்த சிரமங்கள் நிவர்த்தி பெறும். சுப விரயங்களுக்கு வாய்ப்புண்டு. மனையோகமுமுண்டு. பொதுவில் சனி பெயர்ச்சி ஏற்றமான காலம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நன்மையே நடக்கும்.

விருச்சிகம்

தெய்வப் பற்றும் தேசப்பற்றும் ஒருங்கே பெற்ற விருச்சிக இராசி அன்பர்களே! ஜென்மசனி விலகுகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வாய்ப்புண்டு. அரசியல் தொடர்புகள் ஏற்படும். கெளரவப் பதவிகளுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து முரண்பாடு நிவர்த்தியடையும். ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள நேரிடலாம். புதிய வாகன சேர்க்கை அமையும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்மையே நடக்கும்.

தனுசு

மற்றவர்கள் மனதை புரிந்து செயல்படும் தனுசு இராசி அன்பர்களே! இதுவரை ஏழரைச் சனியாக இருந்த சனிபகவான் ஜென்ம சனியாக அடி எடுத்து வைக்கப் போகிறார். குடும்பத்தில் சிறு சிறு மன சஞ்சலம், உடல் நலத்தில் சஞ்சலம், நண்பர்கள் இடையே கருத்து முரண்பாடு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மனச்சஞ்சலம், வெளிவட்டார நண்பர்களால் நன்மை, வாகனயோகம் உண்டு. குடும்பத்தில் பூர்வீகச் சொத்து விவகாரம் தலைதூக்கும். திருமண தடை நீங்கும். மேலும் சனிபகவானை திருநள்ளாறு சென்று தரிசித்து வருவதால் விசேடம். மேலும் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நன்மையே நடக்கும்.

மகரம் 

நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதியடையும் மகர இராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதனாகவும் வாக்குதளம், குடும்பம் ஆகிய வற்றை எடுத்துரைக்கும் அதிபதியாக சனிபகவான் திகழ்கிறார். எனவே, நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் முயற்சி யாவும் வெற்றிபெற சனிபகவான் அருள் புரிவார். இந்த ஏழரைச் சனி காலத்தில் எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். ஆனாலும் முதல் சுற்றா, இரண்டாம் சுற்றா, மூன்றாம் சுற்றா என்பதை தெரிந்து கொள்ளவும். பொங்கு சனியின் ஆதிக்கம் வரும் பொழுது தங்கு தடையின்றி வெற்றியடையலாம். ஏழரைச் சனி வருவதால் வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். பணம், பொருள் தேடிவரும். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நன்மையே நடக்கும்.

கும்பம் 

ஆன்மீகம் முதல் அரசியல் வரை கற்றறிந்த கும்ப இராசி அன்பர்களே! இதுவரை 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்வது விசேடம். உங்களுக்கு பணப்புழக்கம்  திருப்திகரமாக இருக்கும். உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். சென்ற மாதத்தில் இருந்த தடைகள் அகலும். மேலும் திருமணத்தடை நீங்கும். பண நடமாட்டம் சீராகும். தொழில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட சிரமம் நிவர்த்தியடையும். 19.12.2017 ஏற்படும் சனி பெயர்ச்சி விசேட  பலன்களை வழங்கினாலும் புதிய வாகன யோகம் ஏற்பட வாய்ப்புண்டு. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

மீனம் 

உரிமைக்கு குரல் கொடுக்கும் மீன இராசி அன்பர்களே! கடந்த இர ண்டரை ஆண்டுகளாக ஒன்பதாம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் தற்பேது 10ஆம் இடத்திற்கு வரப்போகிறார். உறவினர்களிடையே பகைமை ஏற்பட வாய்ப்புண்டு. பழைய தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். பணத்தட்டுப்பாடு நிவர்த்தி பெறும். உத்தியோகத்தில் உள்ள வர்களுக்கு மேலதிகாரிகளால் மேன்மை உண்டு. உடல் நலத்தில் சிறு 

சஞ்சலம் தோன்றி மறையும். சனிபகவானை வழிபடுவதன்மூலம் மேலும்

நன்மைகளை அடையலாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51