தாய்வானில் நேற்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 6.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானதாக தாய்வான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், 475 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். யூஜிங் நகரின் தென்கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.