இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கை  பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியமை குறித்து  பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமேஸ்வரம்   அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை இலங்கை  பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து மாவட்ட பொலிஸார், மெரைன் பொலிஸார் மற்றும் உளவுத்துறை என பாதுகாப்பு வட்டாரங்கள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய படகை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பைபர் படகு தலைமன்னாரை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ள நிலையில், மர்மமான முறையில் கரைஒதுங்கிய படகில்  சட்டவிரோதமான முறையில் எவரும் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்காலம் அல்லது கடந்த  17 ஆம் திகதி மன்னார் பகுதியைச் சேர்ந்த படகு காற்றின் வேகத்தால் நடுக்கடலில் மூழ்கி ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டுவந்தனர். அவரின் படகா என்ற கோணத்தில்  தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். 

இந்நிலையில்  கடந்த 2005 இல் இலங்கையில் நடைபெற்றுவந்த யுத்தத்தால் அகதிகாளக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்தவர்களின் படகை பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார், சங்குமால் கடற்கரைப் பகுதியல் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு பொலிஸாரின் கவனக்குறைவால் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி தற்போது சேராங்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது  எனத்தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.