கிளிநொச்சி, தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்  கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது இரு மோட்டார் சைக்கிள்களையும் செலுத்திச் சென்றவர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இரு மோட்டார்  சைக்கிளின் பின்னால் இருந்து வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில்,  கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.