சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி நேற்றுக் காலை இலங்­கைக்கு குறு­கிய நேரப் பயணம் ஒன்றை மேற்­கொண்டு, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவைச் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யுள்ளார்.

நான்கு ஆபி­ரிக்க நாடு­க­ளுக்­கான பய­ணத்தை முடித்துக் கொண்டு பீஜிங் திரும்பும் வழி­யி­லேயே, சீன வெளி­வி­வ­கார அமைச்சர், வாங்யி நேற்றுக் காலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்தார். குறு­கிய நேரம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில், சீன வெளி­வி­வ­கார அமைச்­சரின் விமானம் தரித்து நின்ற போது, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும், பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி சில்­வாவும், அவரைச் சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்­தினர். சீன வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­ட­னான பேச்­சுக்கள் பய­னுள்ள வகையில் அமைந்­தி­ருந்­த­தாக பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­துள்ளார். அத்­துடன், இந்த ஆண்டு பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க சீனா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ள பய­ணத்­துக்கு முன்னர், எடுக்­கப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கைகள்

தொடர்­பா­கவும், இந்தச் சந்­திப்பில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் இலங்­கையில் தங்­கி­யுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் குறுகிய நேர விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.