அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் ரயில் பெட்டிகள் வீதியில் கவிழ்ந்ததால் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலைக்கு மேலாக பயணித்த ரயில் தடம் புரண்டதால், ரயில் பாதைக்கு கீழ் இருந்த ஐ-5 தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன.

குறைந்தது 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. இதில் ஒன்று தலைகீழாக நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது.

இதனால் நெடுஞ்சாலையில் பயணித்த பல வாகனங்கள் சிக்கியுள்ளன.

ரயிலில் பயணிதவர்கள் பலர் இறந்துள்ளனர்.

தீயணைப்பு துறையினர் ரயிலில் சிக்கியிருந்த மக்களை மீட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சுமார் 78 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் ரயிலில் பயணித்ததாக தெரிகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு ரயில் மணிக்கு 130 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.