18 மாத பெண் குழந்­தையின் தொண்­டையில் வாழைப்­பழம் சிக்­கி­யதால் குழந்தை மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று அல­வத்­தே­கம என்ற கிரா­மத்தில் நிகழ்ந்­துள்­ளது.

கல­கெ­தர பொலிஸ் பிர­தே­சத்­தைச்­சேர்ந்த இக்­கி­ரா­மத்தில் வீடொன்றில் பெற்றோர் வாழைப்­பழம் ஒன்றின் ­பகுதியை 18 மாத பெண் குழந்­தையின் கையில் கொடுத்­துள்­ளனர்.

இக்­கு­ழந்தை அதனை வாயில் போட்டு விழுங்­கிய போது அது தொண்­டயில் சிக்கி மூச்­சுத்­தி­ணறச் செய்­துள்­ளது. இதனால் குழந்தை வேத­னையால் துடிக்­கவே பெற்றோர் குழந்­தையை உட­ன­டி­யாக மெத­வல வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச்­சென்ற போது குழந்தை அங்கு உயி­ரி­ழந்து காணப்­பட்­டதாக வைத்­தி­ய­சாலை வட்­டாரம் தெரி­வித்­தது.

இக்­கு­ழந்­தையின் திடீர் மரணம் தொடர்­பான மரண விசா­ர­ணையை தும்பளை பிர­தேச திடீர் மரண விசா­ரணை அதி­காரி வை. ஜீவதாஸ் நடத்­தினார். சாட்­சி­யங்­க­ளையும் வைத்­திய பரி­சோ­தனை அறிக்­கை­யையும் பதிவு செய்து கொண்ட பின் வாழைப்­ப­ழத்­துண்டு குழந்­தையின் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது என தீர்ப்பில் தெரி வித்துள்ளார்.