பிரபல தொலைக்காட்சி நடிகர் 16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்

Published By: Digital Desk 7

18 Dec, 2017 | 03:06 PM
image

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பிரிட்டனை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த 34 வயதான ப்ரூனோ லேங்லி என்பவர் ஐ டிவி என்னும் தனியார் தொலைக்காட்சியில் நடித்து புகழ்பெற்றவர்.

இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

ப்ரூனோவிற்கு 29 வயதாக இருக்கும் போது 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி அவருக்கு ஒரு சிற்றின்ப காதல் குறித்த புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார். இந் நிலையில் அந்த சிறுமியுடன் ப்ரூனோ உடலுறவு கொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்த போது தான் அவர் மோசமானவர் என்பது சிறுமிக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமி ப்ரூனோவுடனான தொடர்பை முறித்துக்கொண்டுள்ளார். ஆனால் ப்ரூனோ ஒரு வருடம் கழித்து அந்த சிறுமியை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் ப்ரூனோ வேறு பல பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அவரை  நீக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதனையடுத்து ப்ரூனோ மீது பெண்கள் புகார் அளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே ப்ரூனோ அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திய குற்றத்திற்கு ப்ரூனோவிற்குக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு 12 மாதம் சமூக கட்டுப்பாடு தண்டனையும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஆனால் அவரது மன்னிப்பு யாருக்கும் உதவாது என பாதிக்கப்பட்ட சிறுமி கருத்துக்கூறியுள்ளார். இதனிடையே தனது தவறுக்கு வந்துவதாகவும், தனது செயலுக்கு வேதனைப்படுவதுடன் வெட்கி தலைகுனிவதாக ப்ரூனோ கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17