யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினா் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடந்த 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார்.

பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இப் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.  

அதன் படி இம்மானுவேல் ஆர்னோல்ட்டின் பதவி விலகல் தொடர்பான கடிதம் இன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.