இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை  இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த பத்து இலட்சம் ரூபாமதிப்பிலான 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 இராமநாதபுரம் அருகே நொச்சியூராணி கடற்கரை பகுதியில் வைத்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட  கார்த்தி என்பவரை கைதுசெய்துள்ள இராமநாதபுரம் சுங்கத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.